பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கல்வி நிறுவனங்களை இந்திய அரசு அங்கீகரிக்காத காரணத்தால் மாணவர்கள் யாரும் அங்கு சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் இறையாண்மைக்குட்பட்ட பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் அங்கு செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள், மருத்துவ கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை இந்திய அரசு நிறுவவில்லை என குறிப்பிட்டிருக்கும் பல்கலைக்கழக மானியக்குழு, அவைகளை தாங்களும், அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலும், இந்திய மருத்துவ கவுன்சிலும் அங்கீகரிக்கவில்லை என தெரிவித்துள்ளது.
ஆதலால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கித் பல்திஸ்தான் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர வேண்டாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தியுள்ளது.