பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவு !

பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

கருப்புப் பணத்தை ஒழக்கும் வகையில், பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

பண மதிப்பு நீக்கம் செய்ய ரூபாயை வங்கிகளில் மாற்ற 50 நாள் அவகாசம் தரப்பட்டது. அப்போது வங்கிகளில் மேற்கொண்ட டெபாசிட்டுகள் கண்காணிக்கப்பட்டு, சந்தேகத்துக்கு இடமானவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வருமான வரி சோதனைகள், போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை என அடுத்தடுத்த அதிரடிகள் தொடர்ந்தன.

இந்நிலையில், செல்லாத நோட்டு டெபாசிட்டுக்கு பிறகு அவற்றை எண்ணும் பணியில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டது. இதில், புழக்கத்தில் உள்ள 99 புள்ளி 3 சதவீத நோட்டு, அதாவது, 15 லட்சத்து 31 ஆயிரத்து 73 கோடி திரும்ப வந்து விட்டது என அறிவிக்கப்பட்டது. 10 ஆயிரத்து 720 கோடி ரூபாய் மட்டுமே வரவில்லை என தெரிவித்தது. இதையடுத்து, கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை தோல்வி அடைந்ததாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன.இந்நிலையில், பண மதிப்பு செய்யப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள நிறைவடைந்துள்ளன.

 

Exit mobile version