பாறைக்குழியில் குளிக்க சென்ற இரு மாணவர்கள் பலி

திருப்பூரில் பாறைகுழியில் இறங்கி நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இரு மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்தவர்கள் கோகுல், ஹரிஹரன் சேதுபதி, சுஜீத். இவர்கள் மூவரும் பள்ளி விடுமுறை நாளை கழிக்க, அருகிலுள்ள அம்மாபாளையம் பகுதி பாறைகுழியில் குளிக்க சென்றுள்ளனர். இவர்கள் மூவரும் குளித்து கொண்டிருந்த நிலையில், கோகுல் மற்றும் ஹரிஹரன் சேதுபதி இருவர் மட்டும் பாறைகுழியின் ஆழத்திற்கு சென்று குளித்தனர்.

அப்போது நீச்சல் தெரியாத காரணத்தால் நீரில் மூழ்கினர். சுஜீத் அருகிலுள்ளவர்களை உதவிக்கு அழைத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆழத்தில் சிக்கிய இருவரை சடலமாக மீட்டனர்.

Exit mobile version