வேலையின்றி சுற்றித் திரிந்ததை தட்டிக்கேட்ட முதியோர் இருவர் கல்லால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஏற்காடு, தெப்பக்காடு கிராமத்தை சேர்ந்த பெரியானும், அவரது சகோதரி வெள்ளையம்மாளும் இளவங்கல் எனுமிடத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். நீண்ட நேரம் அவர்கள் திரும்பி வராத நிலையில் இருவரும் கல்லால் தாக்கி கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்தனர். இது குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் சங்கரநாராயணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் இருவரையும் கொலை செய்து விட்டு தப்பியது தெரிய வந்தது. சரவணன் போதையில் சுற்றித் திரிந்ததை பெரியானும், வெள்ளையம்மாளும் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்து இருவரையும் கல்லால் தாக்கி கொன்றதாக சரவணன் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரட்டை கொலை சம்பவம் ஏற்காடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.