இலவசமாக பிரியாணி கேட்டு ரகளையில் ஈடுபட்ட திமுகவைச் சேர்ந்த 2 பேர் தற்காலிகமாக நீக்கம்

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடைக்கு சென்ற திமுகவைச் சேர்ந்த இருவர், இலவசமாக பிரியாணி வழங்குமாறு கேட்டதாக தெரிகிறது. இதற்கு கடை உரிமையாளர் மறுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த இருவரும்,  கடையின் உரிமையாளர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். தடுக்க வந்த கடை ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான, தாக்குதல் காட்சிகள் வெளியானது. இந்தநிலையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும், கட்சியில் இருந்து நீக்கி உள்ளதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த யுவராஜ், திவாகர் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், இருவரும் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

Exit mobile version