சென்னையில் இனி…இரண்டு நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ இயக்கப்படும்..!

சென்னை எனும் பெருநகரமானது பல மனிதர்களைக் கொண்டுள்ளது. தங்கள் வாழ்விற்காக பிழைப்புத் தேடி வெளி ஊர்களிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் கூட புலம்பெயர்ந்துள்ளார்கள். இதனால் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள ஊராக சென்னை மாறியிருக்கிறது. அவர்களுக்கான போக்குவரத்துத் தேவைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது. மக்கள் பேருந்துகள், மின்சார தொடர்வண்டிகள், மெட்ரோ போன்றவைகளைப் பயன்படுத்துகிறார்கள்.

இப்படி பயன்படுத்தினாலும் அவர்களுக்கான போக்குவரத்துத் தேவையானது அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே இதனைக் கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோவானது இனி சென்னையில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்கிறத் தகவலை வெளியிட்டுள்ளது. இதனால் சென்னைவாசிகள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள்.

Exit mobile version