வேலூர் அருகே ஆட்டோ மீது கண்டெய்னர் லாரி மோதல்: 2 பேர் உயிரிழப்பு

வேலூர் அருகே கண்டெய்னர் லாரி ஆட்டோ மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த தேவதானம் அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத கண்டெய்னர் லாரியொன்று, தொடர்ச்சியாக சரக்கு மற்றும் பயணிகள் ஆட்டோ மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் இரு வாகனங்களையும் ஓட்டி வந்த, 2 ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

Exit mobile version