துருக்கியில் கடந்த வாரம் திங்கட்கிழமையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை வரலாற்று பேரழிவாக துருக்கி அரசு அறிவித்தது. மூன்று நிலநடுக்கங்கள் தொடர்ந்து ஏற்பட்டது. 7.8, 7.4 மற்றும் 5.5 ஆகிய ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 6000 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. பல நாட்டிலிருந்து மீட்புப் படையினர் துருக்கிக்கு விரைந்துள்ளனர். அதில் இந்தியாவைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்களும் உண்டு. 6 விமானங்களில் துருக்கிக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இந்தியா நாடு அனுப்பியுள்ளது. நேற்றைக்கு 23 டன் எடையுள்ள நிவாரணப் பொருட்கள் 7வது இந்தியா விமானத்தில் துருக்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையொட்டி இந்தியாவிற்கான துருக்கி தூதர் ஃபிராட் கனெல் தனது சுட்டுரை[டிவிட்டர்] பக்கத்தில், அவசர உதவி தேவைப்படும் நேரத்தில் இந்திய மக்களிடமிருந்து மேலும் சில நிவாரணப் பொருட்கள் வந்துள்ளது. ஒவ்வொரு கூடாரமும், ஒவ்வொரு போர்வையும், ஒவ்வொரு தூங்கும் வசதிகொண்ட கருவிகளும் பாதிக்கப்பட்ட ஆயிரகணக்கான மக்களுக்கு பெரிதும் உதவிகரமாய் இருந்துள்ளது. மீண்டும் மீண்டும் துருக்கி மக்களுக்கு உதவும் இந்தியாவிற்கு மிகவும் நன்றி என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.