துருக்கியில் நிலநடுக்கம் நடந்ததையொட்டி பல்லாயிர கணக்காணோர் இறந்துள்ளனர். இன்றைய வியாழக்கிழமை புள்ளிவிவரத்தின்படி துருக்கி மற்றும் சிரியா இரண்டு நாடுகளின் இறப்பு எண்ணிக்கை 15,000த்தினை எட்டியுள்ளது. இது அதிகரிக்கவும் வாய்ப்புகள் உண்டு. துருக்கியில் மட்டுமே 12,000 நபர்கள் இறந்துள்ளனர். சிரியாவில் 3000 நபர்கள் இறந்துள்ளனர்.
துருக்கி அதிபர் எர்டோகன் பேரழிவு ஏற்பட்டப் பகுதிகளைப் பார்வையிட்டார். வீடிழந்தவர்களுக்கு தங்களின் இயல்பு வாழ்க்கையினை மீட்டுத் தருவதாக உறுதியளித்துள்ளார். இன்னும் மூன்று மாதங்களில் துருக்கியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. பாதிக்கப்பட்ட துருக்கியின் தென்மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு தங்குவதற்கான வசதியும் உணவுப் பொருட்களும் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் துருக்கியினைச் சேர்ந்த 64 வயது நிரம்பிய முதியவர் ஒருவர், நாங்கள் பூகம்பத்திலிருந்து தப்பிவிட்டோம் ஆனால் கடுங்குளிராலும் பசியாலும் செத்துக்கொண்டிருக்கிறோம் என்று கூறினார். மிகவும் வருந்தத்தக்க சம்பவமாக அவரது கூற்று இருந்துள்ளது.
தொடர்ந்து உலக நாடுகள் பாதுகாப்பு மற்றும் மீட்புக் குழுவினரை அனுப்பியபடி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உணவு மற்றும் எரிபொருள் போன்றவற்றை உலக நாடுகள் வழங்கி உதவி வருகின்றனர். மேலும் துருக்கி அதிபர் கூறியதாவது இன்று நாங்கள் கஷ்டப் படுகிறொம், விரைவில் மீண்டு வருவோம் என்று நம்பிக்கை அளித்துள்ளார்.