டிரம்ப் – கிம் ஜான் உன் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வி

வியட்நாமில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்திவருகிறது. இதற்கு அமெரிக்கா, சீனா, தென்கொரியா நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், வடகொரிய நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்ததையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, பிப்ரவரி, 27,28ம் தேதிகளில் வியட்நாமில் இருநாட்டு தலைவர்களும் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் கடந்த 2 நாட்களாக வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், பல்வேறு ஒப்பந்தங்கள் போடப்பட்டது. இருநாடுகளுக்குமிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருந்தநிலையில், டிரம்ப் பாதியில் எழுந்து சென்றதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

Exit mobile version