திறமையான வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்கப்படும் – அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் திறமையான வெளிநாட்டினருக்கு கிரீன் கார்டு வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டினர், கிரீன் கார்டு அல்லது குடியுரிமைக்கான விண்ணப்பித்து பல ஆண்டுகளாக காத்திருக்கின்றனர். இதில் இந்தியர்கள் மட்டும் சுமார் 6 லட்சம் பேர் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திறமையான வெளிநாட்டினருக்கு கிரீன் கார்டு வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கிரீன் கார்டுக்காக விண்ணப்பித்து, லட்சக் கணக்கானோர் பல ஆண்டுகளாக காத்திருக்கும் நிலையில், அவர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், சட்ட விரோதமாக குடியேறியவர்களால் திறமையானவர்கள் பாதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

Exit mobile version