ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்றதால் வியாபாரிகள் போராட்டம்

கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற ஆணைப்படி அகற்ற வந்த ஜேசிபி இயந்திரத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

சுற்றுலா தலமாமான கன்னியாகுமரியில் நாள்தோறும் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பேரூராட்சியின் சார்பில் ஆக்கிரமிப்பு பகுதிகளை இடிக்க ஜேசிபி இயந்திரம் கொண்டு வரப்பட்டது. வியாபாரிகள் ஒன்று சேர்ந்து ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து டிஎஸ்பி பாஸ்கரன் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் அவர்கள் கலைந்து சென்றனர்.தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Exit mobile version