மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் திருச்சி அணி முதலிடம்

மணப்பாறையில் மணப்பாறையில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கிடையேயான மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தியாகேசர் பள்ளி மைதானத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவில் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 14 அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் திருச்சி பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும் மதுரை பள்ளி மாணவர்கள் 2 ஆம் இடத்தையும் பிடித்தனர்.

மாவட்ட காவல்துறை துணை தலைவர் பாலகிருஷ்ணன் வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அதன்பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட தாய்சேய் ஓய்வறையையும் திறந்துவைத்தார். 

Exit mobile version