இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு

இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது மிஜாப்பூர் நீதிமன்றம் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளது. சிறுபான்மையினர் மீதான தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடிக்கு இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பேர் கடிதம் எழுதினர். கடிதத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதலுக்கு பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொது நலத்திற்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டதாக மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் ஜாமினில் வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version