சாலைகளில் உள்ள குப்பைகளை உறிஞ்சும் இயந்திரம் : NIT மாணவர்களின் புதிய படைப்பு

திருச்சியில், தெருக்களில் உள்ள குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து என்.ஐ.டி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.

திருவெறும்பூரில் உள்ள என்.ஐ.டி யில் பொறியியல் படிக்கும் மாணவர்கள், அதன் வளாகத்தில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு கிளப் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பைச் சார்ந்த மாணவர்கள், 1983-ல் தங்கள் படிப்பை முடித்த முன்னாள் மாணவர்களுடன் இணைந்து, சாலையோர குப்பைகளை அகற்றும் கருவியை வடிவமைத்து, திருச்சி மாநகராட்சியிடம் ஒப்படைத்துள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தைக் கொண்டு, காய்ந்த இலைகள், பலவகை நெகிழிகள் மற்றும் இதர குப்பைகளை அகற்ற இயலும் என்கின்றனர், இயந்திரத்தை உருவாக்கிய மாணவர்கள். இது போன்ற இயந்திரங்கள் இன்றைய காலகட்டத்தில் தேவையான ஒன்று என்கிறார்கள் துப்புரவு பணியாளர்கள். இதே போன்று, இன்னும் பல இயந்திரங்களை தயாரிக்க அரசு தங்களை ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version