போக்குவரத்து ஊழியர்களுக்கு அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அறிவித்தபடி முழுமையான சம்பளம் வழங்கப்பட்டது.
சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஜூன் மாதத்துக்கான முழுமையான சம்பளம் வழங்கப்படவில்லை என வதந்தி பரவி இருந்தது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆ.விஜயபாஸ்கர், மாலைக்குள் முழுமையான சம்பளம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி போக்குவரத்து ஊழியர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கப்பட்டது.
ஊழியர்களின் வங்கிக்கணக்கில் இந்த சம்பளம் வரவு வைக்கப்பட்டது. ஜூன் மாதத்தின் கடைசி நாளான நேற்று விடுமுறை என்பதால் இன்று சம்பளம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.