கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு இடைநிலை தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதன் தேர்வு முடிவுகள் கடந்த 29ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிகளில் மாற்றுச்சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. பல மாணவர்கள் இப்பள்ளியில் மேல்நிலை முதலாம் ஆண்டில் சேர்வதற்கு விண்ணப்ப படிவங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள்.