தேசிய விதை உற்பத்தி திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்பு

விருத்தாசலத்தில் தேசிய விதை உற்பத்தி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு, நிலக்கடலை உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் நிலையத்தில், தேசிய விதை உற்பத்தி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான நிலக்கடலை உற்பத்தி குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மேலும், அறுவடைக்கு பின்னான விதை சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்தும் இந்த பயிற்சி வகுப்பில் விளக்கப்பட்டது. கோவை வேளாண்மை விதை மைய விஞ்ஞானி சுந்தரேசன் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இக்கூட்டத்தில் கடலூர், விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Exit mobile version