திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் காய்கறி மார்க்கெட் அமைக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வந்தவாசியில் காய்கறி விற்பனைக்கு தனி இடம் இல்லாததால் சாலை ஓரங்களில் வியாபாரம் செய்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மேலும் நடந்து செல்பவர்களுக்கும் சிரமம் ஏற்படுவதாகவும் வியாபாரிகள் கூறியுள்ளனர். எனவே தங்களுக்கு தனி இடம் தேர்வு செய்து காய்கறி மார்க்கெட் அமைத்து தரவேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.