நாகை மாவட்டம் மல்லியத்தில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழா

இன்றைய வேகமான நவீன உலகில் உணவு என்பது ஒரு நாகரிகப் பொருளாக மாறி வருகிறது. ஆற அமரச் செய்யக்கூடிய உணவுகளை விட்டுவிட்டு நாம் அனைவரும் 2 நிமிடங்களில் தயாராகும் மேகி உள்ளிட்ட துரித உணவுகளை உண்ணவே விரும்புகின்றோம்…. இன்று அனைவரின் வீட்டிலும் உள்ள சமையலறை எப்படிக் குறுகி விட்டதோ அந்த அளவுக்கு மனிதனின் வாழ்க்கையில் உணவுக்கான நேரமும் குறைந்து விட்டது என்றே சொல்லலாம்.

பாரம்பரிய உணவுகளையும் வித்தியாசமான உணவுகளையும் உண்பதில் இளம் தலைமுறையினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மல்லியத்தில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் பாரம்பரிய உணவுத்திருவிழா நடைபெற்றது.

போட்டியில் 50 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு நவதானிய உணவு வகைகள், கோதுமை அல்வா, கேழ்வரகு தட்டை எனப் பாரம்பரிய உணவுகளைத் தயார் படுத்தி அசத்தினர்.

ஆப்பிள் சட்னி, அவல்கேக் உள்ளிட்ட 174 வகையான உணவுகள் இந்தத் திருவிழாவில் இடம் பெற்றிருந்தன.

வகைவகையான உணவுகளைச் சமைத்த மாணவிகள் அந்த உணவினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

உணவுத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இது போன்ற சமையல் போட்டிகள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு உணவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதோடு, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் என்றே கூறுகின்றனர் போட்டியின் நடுவர்கள்.

Exit mobile version