சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்த மேச்சேரியில் தமிழர்களின் பாரம்பரிய கலைத் திருவிழா நடைபெற்றது. இதில் ஓமலூர், ஜலகண்டாபுரம், தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த கலைத் திருவிழாவில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், பரதநாட்டியம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இதில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.