சென்னையில் புத்தாண்டு அன்று 10 ரூபாயில் சுற்றுலாப் பயணம்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையில் புத்தாண்டு அன்று 10 ரூபாய் கட்டணத்தில் சிறப்புச் சுற்றுலாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பொதுமக்களிடையே சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சுற்றுலாவைப் பிரபலப்படுத்தும் நோக்கத்திலும் புத்தாண்டு அன்று சென்னையில் 10 ரூபாய் கட்டணத்தில் சிறப்புச் சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி ஒன்றாம் தேதி அன்று தீவுத்திடல் சுற்றுலாப் பொருட்காட்சி வளாகத்தில் இருந்து மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை விளக்கம், பெசன்ட் நகர் உள்ளிட்ட பிரபலமான பொழுதுபோக்கு இடங்களுக்குச் சென்று திரும்பும் வகையில் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளலாம்.

காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிவரை இதற்கான பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் அவற்றில் 10 ரூபாய் கட்டணம் செலுத்தி ஏறினால், சுற்றுலா செல்லும் குறிப்பிட்ட இடங்களில் எங்கு வேண்டுமானாலும் ஏறி, இறங்கலாம்.

Exit mobile version