சிலி நாட்டில் முழு சூரிய கிரகணம் தோன்றியது. இதனை பலரும் கண்டு ரசித்தனர்.
முழு சூரிய கிரகணம் தெற்கு பசிபிக் நாடுகளில் தோன்றியது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் போது சூரிய ஒளியானது பூமியில் விழாது. இது முழு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த அரிய நிகழ்வு சிலி நாட்டின் லா செரீனா என்ற இடத்தில் தெளிவாக தெரிந்தது. மேலும் அர்ஜென்டினாவிலும் முழு சூரிய கிரகணம் தோன்றியது. இக்கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது என்பதால் தொலை நோக்கி வாயிலாக பலர் கண்டு ரசித்தனர்.