விஜய் நடித்த படங்களில் ’டாப் 10’பாடல்கள் இதோ..

தமிழ் சினிமாவின் தளபதியான நடிகர் விஜய் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதுவரை 62 படங்களில் நடித்திருக்கிறார். அந்த படங்களின் பாடல்கள் எப்போதுமே வெற்றிப் பெரும் வரவேற்பை பெறும். அவற்றில் டாப் 10 பாடல்கள் இதோ:

 1. என்னை தாலாட்ட வருவாளா- காதலுக்கு மரியாதை

விஜய்க்கு ஆரம்பகாலத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் “காதலுக்கு மரியாதை”. கிட்டதட்ட காதலின் மீது மரியாதை வரவைத்த அந்த படத்தில் வரும் “என்னை தாலாட்ட வருவாளோ” பாடல் தமிழின் டாப் மோஸ்ட் காதல் பாடல்களில் ஒன்று.

 2. ஆனந்தம்..ஆனந்தம் பாடும்.. – பூவே உனக்காக

விஜய்க்கான முதல் வெற்றிப்படமான இந்த படத்தில் வரும் “ஆனந்தம்..ஆனந்தம்” பாடல் என்றைக்கும் ரசிக்ககூடிய, அதே சமயம் ஒருதலைக்காதலர்களுக்காகவேசமர்பிக்கப்பட்ட பாடல்.

 3. என்ன அழகு – லவ் டுடே

அனைவராலும் ரசிக்கக்கூடிய காதலை மையப்படுத்திய விஜய் படங்களில் ஒன்று “லவ் டுடே”. அதன் கிளைமேக்ஸ் காட்சியை நிச்சயம் நம்மால் மறக்க முடியாது. அதில் எஸ்.பி.பி. குரலில் ஒலிக்கும் “என்ன அழகு..எத்தனை அழகு” பாடலை இன்றைக்கும் முணுமுணுக்காத இளைய சமுதாயமே இல்லை.

 4. மின்னலை பிடித்து – ஷாஜகான்

இந்த படத்தில் காதலர்களை எப்படியாவது சேர்த்து விடும் கேரக்டரில் நடித்த விஜய் தன் காதலியை நினைத்து பாடும் பாட்டாக உன்னிமேனன் குரலில் ஒலிக்கும் மின்னலை பிடித்து பாட்டிற்கு கிடைத்த வரவேற்பு அளவில்லாதது.

 5. அப்படி போடு – கில்லி

காதல் படங்களில் நடித்த விஜய்ய்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஆக்‌ஷன் திரைப்படம் கில்லி. இதில் வரும் “அப்படி போடு” பாடல் எப்போது கேட்டாலும் ஆட்டம் போட வைக்கும் பாடல்.

 6. எல்லா புகழும் – அழகிய தமிழ் மகன்

ஏ.ஆர்.ரஹ்மான் குரலில் ஒலிக்கும் “எல்லா புகழும்” பாடலை கேட்டால் நிச்சயம் நமக்குள் புது உற்சாகம் பிறக்கும். அதிலும் விஜய்யின் நடனமும் சேர தமிழின் மோட்டிவேஷனல் பாடல்களில் ஒன்றாக இடம் பிடித்தது.

 7. ஆளப்போறான் தமிழன் – மெர்சல்

பலத்த சர்ச்சைகளை கடந்து வெளியான மெர்சல் படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் “தமிழர்களின் பாடல்” ஆகவே கொண்டாடப்பட்டது.

 8. செல்ஃபி புள்ள – கத்தி

கத்தியில் இடம்பெற்ற இந்த பாடல் கில்லியின் அப்படி போடு பாட்டிற்கு பிறகு குழந்தைகளின் பேவரைட்டாக மாறிப்போனது.

 9.உன்னாலே..எந்நாளும் – தெறி

விஜய்-சமந்தா கூட்டணியில் உருவான இந்த டூயட் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

 10. சர்க்கரை நிலவே- யூத்

யூத் படத்தில் காதல் தோல்வியின் பின்னணியில் வரும் இந்த பாடலானது காதலில் தோல்வியடைந்தவர்களின் கானமாக என்றைக்கும் ஒலிக்கும் அளவுக்கு அற்புதமான வரிகளை கொண்டது.

Exit mobile version