ஒருவரிடம் பேசும் போது நாம் வார்த்தைகளை பயன்படுத்துவதை விட தற்போதெல்லாம் எமோஜியை தான் அதிகமாக பயன்படுத்துகிறோம்.2011 ஆம் ஆண்டு முதல் முதலில் செல்போனில் எமோஜியை பயன்படுத்தும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.சிரிப்பு, கோபம், அழுகை என அனைத்திற்கும் விதவிதமான எமோஜிகள் உள்ளது.அதே போல் பொருட்களையும், செயல்களையும் கூட நம்மால் எமோஜி மூலம் வெளிப்படுத்த முடிகிறது.இன்று உலக எமோஜி தினத்தை முன்னிட்டு பலரும் சமூக வலைதளங்களில் தங்களுக்கு பிடித்தமான எமோஜியை பதிவிட்டு வருகின்றனர்.
சந்தோஷத்தை வெளிப்படுத்துவதற்கு இந்த எமோஜியை பயன்படுத்துகிறோம்.
சிரித்து சிரித்து கண்ணில் இருந்து கண்ணீரே வந்துவிட்டது என்பதை உணர்த்துவது தான் இந்த எமோஜி.
கோபம் என்றாலே இந்த எமோஜிதான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.
காதல், நட்பு, குடும்பம் இப்படி அனைத்தையும் வெளிப்படுத்துவதற்கு விதவிதமான எமோஜிகள் உள்ளது.
சிலர் தங்களின் புகைப்படத்தோடு எமோஜிகளை ஒப்பிட்டும், தங்களுக்கு பிடித்தமான எமோஜிகளை குறிப்பிட்டும் பதிவிட்டுள்ளனர்.சினிமா பிரபலங்களின் புகைப்படத்தை எமோஜிகளுடன் இணைத்து சிலர் பகிர்ந்து வருகின்றனர்.உலகம் முழுவதும் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #worldEmojiDay ஹேஸ்டேக் முதலில் உள்ளது.நீங்கள் எமோஜியாக இருந்தால் என்ன எமோஜியாக இருக்க விரும்புவீர்கள் என்பதை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.