இலக்கிய உலகில் சாதனை படைத்த அசோகமித்ரனின் பிறந்த தினம் இன்று

வாழ்க்கையில் நடக்க கூடிய அன்றாட சம்பவங்களை அழகாக சிறுகதை வடிவிலும், நாவல் வடிவிலும் இலக்கிய உலகிற்கு வெளி கொண்டுவந்த கலைஞன் அசோகமித்ரன். அவரை பற்றிய சில தகவல்களை அறியலாம்.

பெண்ணின் ஆழ்மன உணர்வுகளையும், பெண்ணின் அன்றாட நடைமுறைகளையும் அழகாக இலக்கிய வடிவிலும், கவிதை வடிவிலும் நமக்கு பல வண்ணங்களில் காட்சி அளித்தவர் அசோகமித்ரன். இவர் தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்ந்தார். 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவர் தான் அசோகமித்ரன். இவர் இயற்கையிலயே கவிபாடும் சிந்தனை உடையவர். இவர் எழுதிய கதை, நாவல் என அனைத்துமே உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளன.

பெண்ணியல் நோக்கில் எழுதுகின்ற பெண் எழுத்தாளர்கள் கூட தோற்று போவார்கள் இவரின் கதைகளையும், நாவல்களையும் படித்தால். எந்தக் கதையும் யோசிச்சு, இந்த முடிவுக்காக – இந்தக் கருத்துக்காகன்னு இவர் எழுதுவதில்லை. நடைமுறையில் நடக்ககூடிய சம்பவங்களையும், கருத்துகளையும் உள்வாங்கி அன்றாட பெண்ணியல் பிரச்சனைகளை முன் வைத்து, எளிய நடையில் எழுதுவதே இவரின் சிறப்பு. அசோக மித்ரனின் கவிதை, கதைகளில் பெண்களை பற்றின கருத்துக்கள் மிகவும் இனிமையாகவும் உண்மையை மக்களுக்கு சொல்லும் விதமாகவும் இருக்கும். அதே சமயத்தில் அவரது கதைகளில் ஆண் பாத்திரங்கள் மீது கருப்பு சாயம் பூசாமலும் எழுதுவார்.

நம் கடந்து வரும் ஒவ்வொருவரின் வாழ்க்கை பின்னிலையிலும் பல கதைகள் உண்டு. நாம் கண்களை திறந்து பார்த்தால்தான் வெளிச்சம் தெரியும் என்பது போல எல்லாத்தையும் தெரிந்துகொண்டு நான் கவிதை எழுதுவது கிடையாது, நான் கவிதை எழுதுகிற போக்கில்தான் தெளிவு கிடைக்கிறது என்று பல மேடைகளில் அசோகமித்ரன் கூறியுள்ளார்.

இவரின் இலக்கிய சிந்தனையை கௌரவிக்கும் விதமாக சாகித்திய அகாடமி விருது, அக்ட்சரா விருது, தேசிய இலக்கிய விருது, எம்.ஜி.ஆர் விருது போன்ற எண்ணற்ற விருதுகள் பெற்றுள்ளார். இலக்கியத்துக்காக சிறந்த கதைகளை கொடுத்த அசோகமித்ரனின் பிறந்தநாளான இன்று நாமும் இவரை நினைவு கூறுவோம்….

Exit mobile version