நாளைய உலகம் இளைஞர்கள் கையில்தான் என்று பெருமையாக சொல்லும் தினம்தான் இன்றைய தினம்…ஆம் …இன்றைக்கு சர்வதேச இளைஞர்கள் தினம்…அது பற்றிய சிறப்பு தொகுப்பு..
சர்வதேச இளைஞர் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கொண்டாப்படுகின்றது. இளைஞர்கள் ஒரு நாட்டின் நிர்ணய சந்ததிகள். இளைஞர்களை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். அதேநேரம், அழிவுபூர்வமாகவும் பயன்படுத்தலாம். ஒரு நாட்டின் சொத்துக்களாகக் கருதப்படும் இளைஞர்களை நெறிப்படுத்தி அவர்களை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வளமான எதிர்காலமொன்றுக்கு வழிகாட்டுவது தான் இத்தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
அந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துகாட்டாக ஜல்லிகட்டு போராட்டம்,என பல்வேறு போராட்டங்களில் மக்களுக்காக குரல் கொடுத்துள்ளனர். நமது இளைஞர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் அரசு உந்து சக்தியாக இருந்தால் இவர்களின் எதிர்காலத்தை எளிதில் அடைவார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை…..அதே சமயம் இளைஞர்களும் அவர்களது பொறுப்புகளை உணர்ந்து செயல்பட்டால் அவர்களது மதிப்பும் நாட்டின் மதிப்பும் சர்வதேச அளவில் உயரும்.