சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 777 ரூபாயில் இருந்து 5 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 782 ரூபாயாகவும், ஒரு சவரன் 30 ஆயிரத்து 226 ரூபாயில் இருந்து 40 ரூபாய் அதிகரித்து 30 ஆயிரத்து 256 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, கிராமுக்கு 3 ஆயிரத்து 620 ரூபாயில் இருந்து 5 ரூபாய் அதிகரித்து, 3 ஆயிரத்து 625 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு 28 ஆயிரத்து 960 ரூபாயாக இருந்த நிலையில், 40 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து 50 ரூபாய் 40 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி 100 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.