உத்தரபிரதேச மாநிலத்தில், அரசு கட்டும் கழிவறைகளில் உள்ள சுவர் டைல்ஸ்களில், தமிழக அரசின் சின்னம் பதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் அவற்றை உடனடியாக அகற்றியது.
மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் கழிவறைகள் கட்டப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் உத்தரபிரதேச மாநிலத்தில், அரசு கட்டும் கழிவறைகளில் தமிழக அரசின் சின்னம், மகாத்மா காந்தியின் புகைப்படம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம் ஆகியவை அடங்கிய டைல்கள் பதிக்கப்பட்டுள்ளது.
புலந்த்சாகர் மாவட்டம் திபய் கிராமத்தில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 508 கழிப்பறைகளில், 13 கழிப்பறைகளில் இத்தகைய டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்ததும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் டைல்களை உடனடியாக அகற்றியது. இது குறித்து, சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி சதோஷ் குமார், பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.