திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடு குறித்து தமிழக அரசு 400 பக்க விளக்கம்

திமுக ஆட்சியின்போது புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் 375 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.

கட்டுமான பணியின்போது நடந்த முறைகேடுகள் குறித்து நீதிபதி ரகுபதி ஆணையம் விசாரணை நடத்தி வந்தது. இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஸ்டாலின், கடந்த மாதம் வழக்கை வாபஸ் பெற்றார். ரகுபதி ஆணையம் கலைக்கப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இதை எதிர்த்து ஸ்டாலின் மேல்முறையீடு செய்தார். அந்த மனு நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், கல்யாணசுந்தரம் அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் 375 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு தலைமை வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், நவம்பர் 2-ந் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

Exit mobile version