சென்னை செவிலியருக்கு உருமாறிய DELTA PLUS வகை கொரோனா!-பெங்களூர் வைரஸ் நிறுவன ஆய்வு

தமிழ்நாட்டில் ‘டெல்டா பிளஸ்’ தொற்றால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை பரவல் மற்றும் அதன் தாக்கம் தொடர்பாக, தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெங்களூரு வைரஸ் ஆய்வு நிறுவனத்தில் 1,159 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 554 மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில், சென்னை ஒருவருக்கு உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

அந்த செவிலியர் குணமடைந்து தற்போது பணிக்கு திரும்பியுள்ள நிலையில், அவரது உடல்நிலை மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version