மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – தமிழக அரசு

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய அணை கட்டுவதற்கு எதிராக கடந்த 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை கருத்தில் கொள்ளாமல், புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த, கேரளாவிற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Exit mobile version