இந்திய அளவில் நடைபெற்ற சித்த மருத்துவ மேற்படிப்பிற்க்கான நுழைவுத்தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூகனூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்மணி என்ற சித்த மருத்துவ மாணவி, இந்திய அளவில் நடைபெற்ற சித்த மருத்துவ மேற்படிப்பிற்க்கான நுழைவு தேர்வில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். விவசாய குடும்பத்தை சேர்ந்தவரான இவர் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் ஆயிரத்து 62 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
2013 ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு மருத்துவ படிப்பை முடித்துக் கொண்டு பட்ட மேற்படிப்பிற்க்கான இந்திய அளவில் நடைபெற்ற, நீட் நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதியுள்ளார். இதில் 400க்கு 377 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
இந்திய அளவில் நடைபெற்ற நுழைவுத் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.