மொகரம் பண்டிகைக்கான விடுமுறை தினத்தை வரும் 11 ஆம் தேதிக்கு மாற்றி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 10 ஆம் தேதி அரசு விடுமுறை தினம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பிறை தெரியும் 11 ஆம் தேதி மொகரம் அனுசரிக்க தமிழக அரசுக்கு தலைமை காஜி கடிதம் எழுதியுள்ளார். அதன் அடிப்படையில் அரசு விடுமுறை தினம் மாற்றப்பட்டுள்ளது.