திருத்தணியில் குளம் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

திருத்தணியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையிலும் குளத்தை தூர் வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்கவும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், ஏரி, குளங்களை தூர் வாரவும், தன்னார்வலர்கள் முன்வரவேண்டும் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி அறிவித்திருந்தார். இதையடுத்து அருந்ததி காலனி குளத்தை தூர் வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். ஒரு லட்சம் ரூபாய் செலவில், 3 அடி ஆழத்திற்கு தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட உள்ளது.

Exit mobile version