பிரெக்ஸிட் ஒப்பந்தம் கையெழுத்து: திருப்பூர் ஆடை ஏற்றுமதித் துறையினர் மகிழ்ச்சி

நீண்ட இழுபறிக்கு பின் பிரெக்ஸிட் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதற்கு திருப்பூர் ஆடை ஏற்றுமதித் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருப்பூரில் இருந்து அதிகளவு ஆடைகள் பிரிட்டனுக்கு ஏற்றுமதி ஆகின்றன. ஐரோப்பாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் சிக்கல் நிலவி வந்த நிலையில், ஐரோப்பாவில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான “பிரெக்ஸிட்” ஒப்பந்தம் நிறைவேறுவது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்தநிலையில், பெல்ஜியத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய யூனியனுக்கும், பிரிட்டனுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதால், தொழில் துறையினரின் நீண்டநாள் எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறியுள்ளது. இதன் மூலம் திருப்பூர் உட்பட நாடு முழுவதும், ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு மிகப்பெரிய வர்த்தகம் அமைய உள்ளதாகவும், பிற நாடுகளுக்கு இணையாக பிரிட்டன் சந்தையில் திருப்பூர் பொருட்களை சந்தைப்படுத்த முடியும் என்றும் ஆடை ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Exit mobile version