திருப்பதி மலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையாக தடை விதிக்க முடிவு

திருப்பதி மலையில் பிளாஸ்டிக் குடிநீர் மற்றும் பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்களுக்கு முழுமையாக தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருப்பதி மலையில் பிளாஸ்டிக் ஒழிப்பு முயற்சி தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் குளிர்பான பாட்டில்களின் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு முழுவதுமாக தடை செய்ய திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதனால் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட வேண்டிய நிலை உருவாகும் என்பதை கருத்தில் கொண்டு படிப்படியாக நடைமுறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம், தேவஸ்தான பகுதிகளில் சுத்தமான தண்ணீர் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version