டிக் டாக் செயலியால் நேர்ந்த கொடூரம் !

திருத்தணி அருகே சாதிக்கலவரத்தை தூண்டும் வகையில் டிக்டாக் செயலியில் பேச வைத்த நண்பனை, டிக் டாக் பயனாளி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த தாழவேடு கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடராமன். இவர் தனது நண்பர் விஜியின் அறிவுரையின்படி, சில சாதியினரை இழிவுபடுத்தும் வகையில் டிக்டாக் செயலியில் பேசியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வெங்கடராமனின் வீட்டை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, வெங்கடராமனின் தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடராமன், டிக்டாக் செயலியில் தன்னை பேச செய்த, தனது நண்பர் விஜியை தனியாக அழைத்துச் சென்று சுந்தரம்மாகண்டிகை கிராமத்தில் துணியால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் காவல்நிலையத்தில் அவர் சரண் அடைந்தார். விஜியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version