9ம் தேதி சென்னையில் நடைபெறும் IPL போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டி, வருகிற 9-ஆம் தேதி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை, இன்று காலை 9 மணி அளவில் தொடங்கியதையடுத்து, ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை வாங்கிச் செல்கின்றனர். இந்த போட்டியை நேரில் காண்பதற்காக, நேற்று இரவு முதல் வரிசையில் காத்திருப்பதாகவும், ஒரே ஒரு கவுண்ட்டரே இருப்பதால், டிக்கெட் கொடுக்க தாமதமாவதாக கூறும் ரசிகர்கள், கூடுதல் கவுண்டர்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

 

Exit mobile version