படுக்கை வசதி கொண்ட அரசு பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் நிர்ணயம்

தமிழக அரசின் மாநில விரைவு போக்குவரத்துக் கழகம், கழிவறைகளுடன் கூடிய சொகுசு பேருந்துகள், படுக்கையுடன், குளிர்சாதன வசதிகள் கொண்ட சொகுசு பேருந்துகள், படுக்கையுடன் குளிர்சாதன வசதியில்லாத பேருந்துகள் ஆகியவற்றை தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் இயக்கி வருகிறது. தற்போது இந்த 3 வகை பேருந்துகளுக்கான புதிய டிக்கெட் கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, கழிவறைகளுடன் கூடிய சொகுசு பேருந்துகளுக்கு சாதாரண நாட்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 105 பைசா என்ற வீதத்திலும், முக்கிய நாட்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 115 பைசா என்ற வீதத்திலும் டிக்கெட் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version