சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீரேற்று நிலையத்தில் 3 உறை கிணறுகள் அமைப்பு

சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீரேற்று நிலையத்தில் லாரிகளில் இருந்து வீணாகும் நீரை சேமிப்பதற்காக உறை கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

கீழ்ப்பாக்கம் குடிநீர் நிரப்பும் நிலையத்தில் இருந்து கீழ்பாக்கம், புரசைவாக்கம், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு 120 லாரிகள் மூலமாக 8 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் 1000 முறை லாரிகளில் நீர் நிரப்பும் சூழலில் 2 சதவீதம் நீரானது வெளியேறுகிறது.

இவ்வாறு வெளியேறும் நீரை சேமிக்கும் விதமாக 3 குடிநீரேற்று நிலையத்தில் 3 உறைக்கிணறுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 40 அடி ஆழமுள்ள உறைக்கிணறுகளில் நீர் சேமிக்கப்பட உள்ளதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version