அறிஞர் அண்ணா பூங்காவில் புதிய வரவாக மூன்று புலி குட்டிகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புலிக்குட்டிகள், பார்வையாளர்களுக்காக காட்சிக்கு விடப்பட்டுள்ளது.

சென்னை அருகே வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நம்ருதா என்ற வெள்ளைப்புலிக்கும் நகுலா என்ற ஆண் புலிக்கும், கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி 3 குட்டிகள் பிறந்தன. பிறந்து 3 மாதமான 2 கறுப்பு மற்றும் ஒரு வெள்ளைநிற புலிக்குட்டிகளை பார்வையாளர்களுக்கு காண்பிக்காமல், பூங்கா நிர்வாகம் பாதுகாத்து வந்தது.

இந்நிலையில் 3 புலிக்குட்டிகளையும், அதன் தாயையும் சேர்த்து தனிக்கூடத்தில் பார்வையாளர்கள் கண்டுரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக பிறந்த 3 குட்டிகளுடன் சேர்ந்து புலிகளின் எண்ணிக்கை 28 ஆக உள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version