பழனியில் கார் கவிழ்ந்து விபத்து: மலேசிய சுற்றுலா பயணிகள் உள்பட 3 பேர் பலி

பழனியில் அதிவேகமாக சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மலேசியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரை சேர்ந்த சின்னக்கண்ணு என்பவரின் மனைவி ஈஸ்வரி தனது குடும்பத்துடன் பழனிக்கு வந்துள்ளார். அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு வரதமாநதி அணைக்கு காரில் சென்றுள்ளார். அப்போது கட்டுபாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், ஈஸ்வரி, மகன் சஞ்சய், மற்றும் கார் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த இருவர் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், எந்தவித காயமுமின்றி உயிர் தப்பிய மூன்று குழந்தைகளும் பாதுகாப்பாக அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Exit mobile version