வேடசந்தூரில் ரூ1.90 லட்சம் செலவில் கட்டப்பட்ட 3 புதிய மேம்பாலங்கள்

வேடசந்தூரில் தரை பாலத்தை மாற்று மேம்பாலமாக அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்த தமிழக அரசிற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட வடமதுரை ஒன்றியத்தில் இருந்து செங்குறிச்சி செல்லும் சாலையில் வேலாயுதம்பாளையம் வழியாக, கடந்த சில வருடங்களாக விவசாயிகளும்,பொதுமக்களும் தாழ்வான பகுதி சாலையை பயன்படுத்தி வந்தனர். இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்குவதால், விபத்துக்கள் ஏற்பட்டு வந்தன.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், வடமதுரை- செங்குறிச்சி சாலையில், 1 கோடியே 90 லட்சம் செலவில் புதிய மூன்று பாலங்கள் கட்டப்பட்டன. இந்த புதிய 3 மேம்பாலங்களை முதலமைச்சர் பழனிச்சாமி தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதற்கு பொதுமக்கள் அரசிற்கு நன்றி தெரிவித்து இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனர்.

Exit mobile version