ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்துடன், அமெரிக்கா, ரஷ்யா மற்றும் இத்தாலியைச் சேர்ந்த 3 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்று சேர்ந்தனர்.
பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்-வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்.
இந்நிலையில், சோயூஸ் எம்.எஸ்-13 விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு, ஆண்ட்ரூ மோர்கன், லூகா பார்மிடானோ மற்றும் அலெக்சாண்டர் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் விண்வெளி மையத்தில் நுழையும் போது, ஏற்கனவே தங்கியுள்ள விண்வெளி வீரர்களை சந்தித்து மகிழந்தனர்.