பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்த 3 ரவுடிகள் கைது

சென்னை புளியந்தோப்பு பகுதிகளில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த மூன்று ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

புளியந்தோப்பு போலீசார் ரோந்து பணியின் போது பட்டா கத்தியுடன் சுற்றித் திரிந்த மணிகண்டன், வால்குரங்கு பிரசாத், அருண்குமார் ஆகியோரை கைது செய்தனர். 4 பேரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் கடந்த 26 ஆம் தேதி ரவுடி எழிலரசனை புளியந்தோப்பு காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் கைது செய்தனர். இவருக்கு ஆதரவாக தற்கொலை மிரட்டல் விடுத்த விஜய், வாஜித் பாஷா, திருமாறன், ஸ்டீபன் ஆகியோரயும் கைது செய்தனர்.

இதையடுத்து அன்று நள்ளிரவு அரும்பாக்கத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் சாலையில் சென்றவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 7 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவுடிகள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Exit mobile version