திருவாரூர் மாவட்ட முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்து மத்தியக் குழு ஆய்வு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர் மாவட்ட மக்கள் தங்களை குறைகளை மத்திய குழுவிடம் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
கஜா புயல் தாக்கியதில், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களின் நிலைமை மோசமாகியுள்ளன.

வீடு, உடைமை, கால்நடைகள், மரங்கள், விளைபயிர்கள் என பல்வேறு சேதங்களுக்கு ஆளாகியிருக்கும் அவர்களை பார்வையிட மத்தியக் குழு தமிழகம் வந்துள்ளது. டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான 7 பேர் கொண்ட மத்தியக் குழு, தஞ்சை மாவட்ட ஆய்வுகளை முடித்துக்கொண்டு திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்தது.

முத்துப்பேட்டை, ஜாம்புவான்ஓடை, தில்லைவிளாகம், கற்பகநாதர் குளம் ஆகிய பகுதிகளில் புயல் சேதங்களை மத்தியக் குழு பார்வையிட்டது. புயல் பாதிப்பு முகாம்களுக்கு சென்ற அதிகாரிகள் அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினர். உடைந்த வீடு, தென்னை, உயிரிழப்பு உள்ளிட்ட சேதங்களை குறித்துக்கொண்ட அவர்கள், பின்னர் நாகப்பட்டினம் சென்றனர்.

அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய அவர்கள், நாகை மற்றும் காரைக்கால் பகுதியில் திங்களன்று ஆய்வு மேற்கொள்கின்றன. டேனியல் ரிச்சர்ட் குழு செவ்வாய்க் கிழமை மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Exit mobile version