திருமுல்லைவாயில் சிறுமி கொலை வழக்கு: முன்னாள் ராணுவ வீரரின் மனைவியும் கைது

திருமுல்லைவாயிலில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரர் மற்றும் உடந்தையாக இருந்ததாக அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை திருமுல்லைவாயில் காவல் நிலையம் அருகே ராஜேந்திரன் என்பவர் தனது மனைவி செல்வி, மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். தனது மகனை டியூசனுக்கு அழைத்து சென்ற செல்வி, வீடு திரும்பியதும் மகளை காணாது அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசாரின் சோதனையில் ராஜேந்திரனின் உறவினரும், முன்னாள் ராணுவ வீரருமான மீனாட்சி சுந்தரம் என்பவரின் வீட்டில் உள்ள கழிப்பறையில் ஒரு பையில் சிறுமியின் உடல் திணித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமிக்கு மீனாட்சி சுந்தரம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கணவரின் குற்றத்துக்கு உடந்தையாக இருந்ததாக மீனாட்சி சுந்தரத்தின் மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.

Exit mobile version