இந்த 5 காய்கறிகள் கூந்தலின் வளர்ச்சியை அதிகரிக்கும்..

நீங்கள் கூந்தலை பராமரிக்க என்ன செய்தாலும் முடி உதிர்வது குறையவில்லையா? அப்படியென்றால் உங்கள் தலைமுடிக்கு இயற்கையான ஊட்டச்சத்து தேவைப்படுகிறது.அப்படி காய்கறிகளை வைத்து உங்களை கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்கள்…

1.வெங்காயம்

வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தேன் சேர்க்கவும்.பின்பு தலையில் அந்த பேஸ்ட்டை தடவி 30 நிமிடங்கள் காய வைத்து அலச வேண்டும்.வெங்காய வாசனை பிடிக்காதவர்கள் இதனுடன் சிறிது ரோஸ் வாட்டரை கலந்துக்கொள்ளலாம்.இப்படி ஒரு வாரத்திற்கு, ஒரு முறை செய்து வந்தால் உங்கள் முடிக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.

2.கொத்தமல்லி

கொத்தமல்லி இலைகளை அரைத்து சாறு எடுத்துக்கொண்டு தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊர வைத்து அலசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

3.பூண்டு

பூண்டுச்சாறினை எடுத்து முடியின் வேரில் நன்றாக தேய்த்தால் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.

4.உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு சாறுடன், சிறிதளவு தேன் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவினை சேர்த்து கலக்கவும்.பின்பு முடியில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து அலச வேண்டும்.உருளைக்கிழங்கு முடியில் இருக்கும் அழுக்கினை நீக்க உதவும்.

5.கேரட்

கேரட்டை வேக வைத்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும்.அதை முடியில் தடவி நன்றாக உலர வைத்து பின்பு அலச வேண்டும்.இப்படி செய்து வந்தால் முடியின் ஊட்டச்சத்து அதிகரிக்கும்.

 

Exit mobile version