பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம் கொடுக்காமல் வேலை நடைபெறுவதில்லை !

புதுக்கோட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மாணவர்கள் மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதால், விடியா திமுக அரசு உடனடியாக மது மற்றும் போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் விடியா திமுக ஆட்சியில், பள்ளிக்கல்வித்துறையில் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

Exit mobile version